வெள்ளி, 3 நவம்பர், 2017

திருவருட்பயன் - பெயர் விளக்கம்

திருவருட்பயன் - பெயர் விளக்கம்

திருவருட் பயன் என இந்நூலுக்குப் பெயர் வைத்த காரணத்தை அறிவதற்கு நாம் சிவப்பிரகாச நூலை நோக்க வேண்டியுள்ளது. சிவப்பிரகாசம் இரண்டு பகுதிகளை உடையது. பின் பகுதியை ஏழு தலைப்புக்களாக வகுத்துக் கொண்டு விளக்கிச் செல்லு<கிறார் ஆசிரியர். அத்தலைப்புக்களுள் இரண்டினை இங்கே குறிப்பிடுதல் வேண்டும். அவை பொங்கொளி ஞான வாய்மை, அதன் பயன் என்பவை. பரம்பொருளின் குணமாகவும் பிழம்பாகவும் உள்ள அறிவொளியே திருவருள் என்பது. அதனையே பொங்கொளி ஞான வாய்மை எனக் குறித்தார் ஆசிரியர். திருவருளால் உயிர்க்கு உண்டாகும் ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, ஆன்ம லாபம் என்ற மூன்றையுமே அதன் பயன் எனக் குறித்தார். சிவப்பிரகாசத்தில் உள்ள இவ்விரு தலைப்புக்களையும் இணைத்தால் கிடைப்பது திருவருட் பயன் என்ற பெயர். அதனையே இந்நூலுக்குப் பெயராகச் சூட்டினார் ஆசிரியர்.
சிவப்பிரகாசத்தில் ஞானவாய்மையும், அதன் பயனும் ஆகிய இரண்டையும் சுருக்கமாகவும் செறிவாகவும் கூறிச் சென்ற ஆசிரியர் திருவருட்பயனில் அவற்றிற்கென ஐந்து அதிகாரங்களை நூலில் சரி பாதியை பகிர்ந்தளித்து விரிவாக விளக்கியுள்ளார். அருளது நிலை, அருளுருநிலை, அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை என்ற அந்த அதிகாரங்களில் திருவருளின் இயல்பையும், திருவருளால் உயிர் அடையும் பயனையும் படிப்படியாக இனிமையான முறையில், மாணவர்களுக்கு ஏற்ற முறையில் விளக்கிச் சென்றுள்ள பான்மை வியக்கத்தக்கதாய் உள்ளது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...