38. திருவருளை உணராமல் தாமே முதல்வர் எனல்
வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்து இருளாம்
கள்ளத் தலைவர் கடன்.
கள்ளத் தலைவர் கடன்.
பொருள் : எங்கும் நிறைந்துள்ள திருவருள் இடத்திலேதான் எல்லா உயிர்களும் உள்ளன. ஆயினும் பொய்த் தலைவராகிய அந்த உயிர்கள் திருவருளால் வரும் பேரின்பத்தை நுகராமல் துன்புறுகின்றன. உயிர்களது இந்த நிலை, நல்ல நீர்ப் பெருக்கிலே நின்று கொண்டு ஒருவன் நீர் வேட்கையால் நா வறண்டு நிற்பதைப் போன்றது ஆகும். இதற்கு இன்னொரு உவமையும் கூறலாம். பொழுது விடிந்த பின்னும் அதனை உணராமல், இருள்வயப்பட்டு உறங்கிக் கிடப்பதைப் போன்றது திருவருளை உணராத நிலை என்றும் கூறலாம்.
சொற்பொருள் :
கள்ளத் தலைவர் - எச்செயலிலும் தமக்குச் சுதந்திரம் சிறிதும் இல்லாதிருக்கவும், எல்லாவற்றிற்கும் தாமே முதல்வர் எனக் கூறிக்கொள்ளும் பொய்த் தலைவராகிய உயிர்கள்.
கடன் (ஆல்) - திருவருளை மறந்து செய்யும் செயலால்
வெள்ளத்துள் நா வற்றி - நல்ல நீர்ப் பெருக்கில் நின்று கொண்டு இருந்தும் நீர் வேட்கையால் நாவறண்டு துன்புறுவது போன்ற நிலையே உளதாகும். (மேலும்)
எங்கும் விடிந்து இருளாம் - பொழுது விடிந்த பின்னும் பகலவனது ஒளியை உணராது இருள் வயப்பட்டு உறங்கிக் கிடப்பதைப் போன்ற நிலையே உளதாகும். (நிறைந்த இன்பத்துள் நின்றும் அதனை நுகரமாட்டாது துன்புறும் நிலையே உயிர்களுக்கு உண்டாயிற்று என்பது கருத்து.)

விளக்கம் :
கள்ளத் தலைவர் :
ஒன்றுக்கும் பற்றாத எளிய உயிர்கள் நாமெல்லாம். ஆயினும் நம்மைப் பற்றி எப்படியெல்லாம் எண்ணிக் கொள்கிறோம்! இந்த உலகத்தையே நாம்தான் தாங்கி நிற்கிறோம் என்பதாகவும், நமக்கு இணையாக வேறொருவர் இல்லை என்பதாகவும் எண்ணி இறுமாக்கின்றோம். பிறரைவிடத் தம்மை மிகுதியாகக் கருதிக் கொள்ளுதலும், எச் செயலுக்கும் தம்மையே தலைவராகக் கொள்ளுதலும் ஆகிய இவையெல்லாம் ஆணவ மலத் தொடர்பினால் விளைவனவாகும். எச்செயலும் இறைவன் செயலாய் இருக்க, அதனை உணராது யாதொரு செயற்கும் தம்மையே தலைவராகக் கொள்ளும் உலகவரின் நிலையை என்னென்பது! அப்படிப் பட்டவர்கள் பட்டங்கள் பெறவதில் ஆசையுள்ளவர்களாய் இருப்பார்கள் அல்லவா? ஆதலால் அவர்களுக்கு ஒரு பட்டம் வழங்குகிறார் ஆசிரியர் உமாபதி சிவம். கள்ளத் தலைவர் என்பதே அப்பட்டம்! எவ்வளவு பொருத்தமான பட்டம்! இறைவனது தலைமையைக் கவர்ந்து தமதாக்கிக் கொள்ள முனையும் மடமை கருதி அவரைக் கள்ளத் தலைவர் என்றார்.
ஒருவர் அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் அவர் மேற்கொண்ட செயல் முடியாமற் போதலைக் காண்கிறோம். ஒரு பொருளைக் பெற நினைத்து ஒரு செயலில் ஈடுபட்டால் அப்பொருள் கிடைக்காமல் போகிறது. ஒரு பொருளை நினையாதிருக்கும் பொழுது அப்பொருள் தானே வந்து கிடைக்கிறது. இதையெல்லாம் கருதியே, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது என்றும், எல்லாம் ஈசன் செயல் என்றும் பெரியோர் கூறினர். எனவே, எல்லாம் திருவருட் செயலாய் இருக்க, அதனை உணராமல், இச்செயலை நானே செய்து முடித்தேன் எனவும், இது எனது சாதனை எனவும், இதனைச் செய்வதற்கு என்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் எனவும் கருதிக்கொண்டு, அச் செயல்களுக்குத் தம்மையே தலைவராகக் கொள்பவரே கள்ளத் தலைவர் ஆவர்.

உவமைகள் :
1. வெள்ளத்துள் நாவற்றுதல் :
இந்த உவமை, மாணிக்க வாசகர் தமது நிலையைக் குறிக்கப் பயன்படுத்தியதாகும். (நீத்தல் விண்ணப்பம், செ.14) இறைவனது அருளில் தோயப் பெற்றும், பொறி புலன்களால் வரும் துன்பத்திலிருந்து நீங்க முடியவில்லையே என்ற தமது ஆற்றாமையை இவ்வுவமை மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வுவமையை இங்கு உயிர்களின் நிலைக்குப் பொதுமைப் படுத்திக் கூறியுள்ளார் உமாபதி சிவம். உயிர்கள் திருவருளோடு கலந்து உள்ளன. இது வெள்ளத்துள் நிற்பதைப் போன்றது. ஆயின் அவ்வுயிர்கள் திருவருளால் வரும் பேரின்பத்தை அனுபவியாமல் துன்புறுகின்றன. இது வெள்ள நீரைப் பருகாமல் நா வறண்டு நிற்பதைப் போன்றது.
2. விடிந்து இருளாம் :
இனி, இரண்டாவது உவமை எங்கும் விடிந்து இருளாம் என்பது. உமாபதி சிவம் முதல் உவமையைத் திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து எடுத்து அமைத்துக் கொண்டார் என அறிந்தோம். நீத்தல் விண்ணப்பத்தை அடுத்து இருப்பது திருவெம்பாவை என்ற பகுதி. திருவெம்பாவையில் வரும் பெண்களின் உரையாடலிலிருந்து இந்த இரண்டாவது உவமையை அமைத்துக் கொண்டாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. திருவெம்பாவையில், எழுப்ப வந்த பெண்கள் மிக்க தூக்கம் உடையவளாய்த் தன்னை மறந்து படுக்கையிற் கிடக்கும் ஒருத்தியைப் பார்த்து இன்னும் விடியவில்லையா? என்று கேட்கிறார்கள். படுக்கையிற் கிடந்தவளுக்கோ எழுவதற்கு மனமில்லை. ஆனால், அதை எப்படிச் சொல்வது? அதனால் அவர்களைப் பார்த்து வரவேண்டிய அத்தனைப் பெண்களும் வந்து விட்டார்களா? என்று கேட்கிறாள். வரவில்லையென்றால் அது வரையில் தூங்கலாமே என்ற ஆசை அவளுக்கு!
உறங்கிக் கிடத்தல் என்பது ஆணவ மல இருளின் வசப்பட்டிருத்தலைக் குறிக்கும். உறக்கம் நீங்கி எழுதல் என்பது மலப் பிணிப்பிலிருந்து விடுபட்டுப் பக்குவம் பெறுதலைக் குறிக்கும். நீராடுதல் என்பது திருவருளில் தோய்ந்து இன்புறுதலைக் குறிப்பதாகும். எனவே, விடிந்த பின்னும் உறங்கிக் கிடக்கின்ற அப்பெண்ணின் நிலை, திருவருளில் தோய்வதற்கு விருப்பமின்றி ஆணவ இருளின் வசப்பட்டுக் கிடக்கும் உயிர்களின் நிலையைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். திருவெம்பாவையில் வரும் அப்பெண்ணின் நிலையை நினைந்தே நம் ஆசிரியர் <உமாபதி சிவம் பக்குவமில்லாத உயிர்களின் நிலையைச் சுட்ட எங்கும் விடிந்து இருளாம் என்றார் போலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக