மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
பண் :
பாடல் எண் : 1
வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.
பொழிப்புரை :
சிவபெருமானது
சூலம் மாறி மாறி வருகின்ற திசை களைச் சொல்லுமிடத்து, திங்களும்,
சனியுமாகிய கிழமைகளில் கிழக்காம். செவ்வாயும், புதனுமாகிய கிழமைகளில்
வடக்காம். ஞாயிறும், வெள்ளியுமாகிய கிழமைகளில் மேற்காம். இக்கிழமை களில்
சூலம் இவ்வாறாக நிற்கும்.
குறிப்புரை :
எஞ்சிய
கிழமையில் நிற்கும் திசையை அடுத்து வரும் திருமந்திரத்திற் காண்க.
அத்திருமந்திரத்தில், ``அக்கணி சூலம்`` என வருமாறே, இத்திருமந்திரத்திலும்,
``சூலம்`` என்பதுடன் ``அக்கணி`` என்பதனைக் கூட்டிப் பொருள்கொள்க. பார்
ஒத்தல் - நிலத்திற்குப் பொருந்துதல். செவ்வாயை `நில மகன்` (நிலத்திற்கு
உரிமை யுடையவன்) எனச் சோதிட நூல் கூறும்.
பண் :
பாடல் எண் : 2
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.
பொழிப்புரை :
வியாழக்கிழமையில்
சூலம் இருக்கும் திசை தெற்காகும். சிவபெருமானுடைய சூலம் (பயணம்
செய்பவனுக்கும், யோகிக்கும்) இடப் பக்கத்திலும், பிற்பக்கத்திலும்
இருப்பின் ஏற்புடையதாகும். ஆகவே, அப்பொழுது அவர்கட்குத் தீங்கு இல்லை. வலப்
பக்கத்திலும், முற்பக்கத்திலும் இருப்பின் தீங்கு மிக விளையும்.
குறிப்புரை :
அக்கு
அணி - எலும்பை அணிந்தவன். உம்மை இரண்டும் அசைநிலைகள். `சூலம் இடம் பின்
ஆகில் ஆம்; துக்கம் இல்லை` எனவும், வலம் முன் தோன்றிடில் மிக்கதாகிய
மேல்வினை மேன்மேல் விளையும் எனவும் கூட்டி வினை முடிவுசெய்க.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் கூறப்பட்ட பொருள்கள் சோதிட நூல்களிலும் இவ்வாறே கூறப்படுகின்றன.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் கூறப்பட்ட பொருள்கள் சோதிட நூல்களிலும் இவ்வாறே கூறப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக