சனி, 24 மார்ச், 2018

வன்னியர் தோற்றம் பிறப்பின் வரலாற்று

ஒவ்வொரு வன்னியனும் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை,
நீங்க மாற்று கட்சியில இருங்க இல்லாம போங்க, வன்னியராய் பிறந்தவர்கள் தான் சார்ந்த பிறப்பின் வரலாற்றை தெரிந்து கொள்வது நம் தலையா கடமை,
வன்னியர் தோற்றம் :
==================
இந்து மதத்தில் உள்ள 9 புராணங்களில ஒன்று வன்னிய புராணம்,
புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான் திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்.
பூநூல் :
=======
பூநூல் அனிவது ஷத்ரியர்களின் வழக்கம்,
ஷத்ரியன் மட்டுமே பூநூல் அனிந்தவன் காலப்போக்கில் ஆரியனான பார்பனன் அனிந்தான்,
தமிழகத்தில் பெரியாரின் திராவிட இயக்கம் தோன்றுவதற்க்கு முன்புவரை வன்னியன் பூநூல் அனிந்திருந்தான், வட நாட்டு " சிங் " சாதியினரை போன்று தாடி மீசையையும், முடாயையும் வெட்டாமல் இருந்தவன், இன்றும் அரியலூர் மாவட்டத்தில் வாழ்கின்றனர், காலபோக்கில் இவை மறைந்து, ஆனாலும் திருமணத்தின் போது வன்னியர்கள் பூநூல் அனிந்து தான் மனப்பெண்ணுக்கு தாளியையே கட்டுகின்றனர் இன்றும்
Draupathi / திரெளபதி வழிபாடு :
==========================
ஷத்ரிய குடியில் பிறந்த திரௌபதி வழிபாடு என்பதள தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் காலத்தில் கொண்டுவரப்பட்டது,
பாரத போரை மைய படுத்தி போர் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பது பற்றி போர்குடிகளான வன்னிய மரபினருக்கு வழிபாட்டு முறை அன்றைக்கு பாடமாக நடத்தபட்டிருக்கின்றது..!
இன்றைக்கும் தமிழகத்தில் எந்த மூலையில் திரௌபதி கோவில் இருந்தாலும் அங்கு வன்னியர்கள் தான் அடர்த்தியாக இருக்கின்றார்கள்..!
அக்னி தாய் அக்னி குலத்தின் அடையாளம்,
திருமண முறை :
==============
தமிழ் சாதியகளில் வன்னியர்களின் திருமண முறை முற்றிலும் மாறுபட்டதே,
திருமணத்தின் போது மணமகன் பூநூல் அனிந்து தான் மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவார்,
மற்றும் இரு பானை மற்றும் அரச மரக்கிளையை வைத்தும்,
பந்தல் வரை பானையை அடுக்கி பட்டு புடைவையுடன் அக்னி சாட்சியின் முன் திருமணம் செய்வது வழக்கம்,
இந்த முறை வட இந்திய ராஜபுத்திர வம்சாவழியினரும் பின்பற்றுகின்றனர்,
நம் வன்னியர் திருமணங்களில் அசைவம் முற்றிலும் கிடையாது,
இது நம் வம்சத்தின் வரலாறு,
கி.பி 1886 ல் இந்தியாவிலேயே முதல் முதலாக வன்னிய குல ஷத்திரிய மஹா சங்கம் என்று ஒரு சாதி சங்கத்தை மதராஸ் பிரசிடன்சியில் தோற்றுவித்த மகான் ஸ்ரீ கா.கோபால் நாயகர் அவர்கள்.
ஆங்கிலேய கைக்கூலிகள் வன்னியர்ககளை "பள்ளி " என்று இழிவுபடுத்தியபோது பள்ளி என்பது இழிவான சொல் அல்ல வன்னிய அரசர்கள் சமண துறவிகளுக்கு நிலம் வழங்கியதை சமணப் பள்ளி, மடப் பள்ளி என்று வழங்கப்பட்டன இதன் காரனமாக பின்னாளில் வன்னிய மன்னர்களின் வழித்தோன்றல்களுக்கு இப்பெயர் நிலைத்தது.அது உயர்வான சொல்லே என்று
வ கு ஷ அதிகாரப்பூர்வ பத்திரிக்கைகளான வன்னியகுலாதித்தன், அக்னிகுல மித்ரன் உள்ளிட்ட இதழ்களின் மூலமாக விளக்கங்கள் பல தந்தார்.
இன்று நாம் ஷத்திரியன் என்று காலரை தூக்கிவிட்டு கெத்தாக நெஞ்சை நிமர்த்தி நடக்க காரணமானவர்களில் இவர் முக்கியமானவர்.
வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை வன்னியகுல ஷத்திரியர் எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து வன்னியர்கள் ஷத்திரியர் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.
பின்பு நாங்களும் ஷத்திரியர்தான் என்று சில சாதிகள் உரிமைகொண்டாடின இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்த பிரிட்டிஷ் அரசு தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே ஷத்திரியர் என அரசாணை எண் 26 கெசட்டலும் வெளியிட்டனர்.
வன்னிய குல க்ஷத்ரியர்" என்ற நம் பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய இளைய தலை முறை அறிந்து கொள்ள வேண்டும்
நம் சமுதாயத்திற்கு க்ஷத்ரியர் என்ற சாதரணமாக கிடைத்து விட வில்லை கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்வி ,பொருளாதாரம் ,ஆட்சியில் இருந்து வந்த நாம் இடைப்பட்ட கால படையெடுப்பு களில் ஆட்சி அதிகாரத்தை இழந்ததனால் நம் வரலாற்றை, கல்வி தொலைத்து 600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ள பட்டோம் , வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு கடைசியாக வந்த ஆங்கிலேயன் நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில பள்ளி என்று நம்மை இணைக்க பார்த்த பொது கொதித்து எழுந்தனர் நம் சமூகம் எங்களை வன்னிய குல க்ஷத்ரியர் என்ற குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்ப அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும் , ஆர்பாட்டங்களும் வெடித்தன .
அப்போது ஆங்கிலேயர்கள் கேள்வி
ஒரு சமுதாயத்திற்கு அல்லது சாதிக்கு உயருந்த அரச மரபினர் என்ற பெருமை இருந்தால் அதற்கு ஆதாரங்கள் இருக்கும் இலக்கிய ,இதிகாச ,புராண, சரித்திர கல்வெட்டு , சிலசசான, தாமிர பட்டய சான்று பள்ளிகலான உங்களுக்கு உள்ளதா? இருந்தால் கொண்டு வாருங்கள் உங்களுக்கு " க்ஷத்ரியர்" என்று அரசு கணக்கெடுப்பில் குறிப்பிடுகிறோம் என்றனர் .
சான்றுகள் தேடுதல்
இப்போதே கல்வி அறிவு குறைந்து உள்ள நம் சமூகம் 1871 இல் எப்படி இருந்து இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தல் வேதனை தான் மிஞ்சும் 5 சதவீதத்திற்கும் குறைவான கற்றவர்கள் ,பட்டம் பெற்றவர்கள் ,வழக்குறிஞ்சர்கள், எல்லாம் தேட தொடங்கினர்
குன்னம் முனுசாமி பிள்ளை பிள்ளை என்பது வன்னியர்களின் பட்டங்களில் ஒன்று திருச்சி ,புதுகோட்டை நம் மக்கள் பிள்ளை என்ற பட்டதுடன் ஜம்பு மக ரிஷி கோத்திரத்தில் வாழுந்து வருகிறார்கள் . 1872 ஆம் ஆண்டு குன்னம் முனுசாமி பிள்ளை என்ற உறவினர் " ஜாதி சங்கிரச்சரம் " என்ற நூலில் வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது .
காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார் . முனுசாமி நாயகர் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார் .
கா. அண்ணாசாமி நாயகர் " வன்னிய குல விளக்கம் " என்ற நூலை தமிழ் ,தெலுங்கு ,ஆங்கிலம் , மூன்று மொழிகளில் வெளியிட்டார் பல்வேறு இலங்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும் ,கல்வெட்டு செய்திகளையும் ,வட மொழி சூத்திரங்களையும் , தாமிர செப்பேடு செய்திகளையும் பல ஊருகளுக்கு சென்று அலைந்து திருந்து சேகரித்து புத்தகமா அச்சிட்டார் . சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவை என்று சான்றுகள் பெற்று இணைத்து உள்ளனர் சுமார் 15 -20 ஆண்டுகள் தன வக்கீல் தொழிலை விட்டு அலைந்து திரிந்து உருவாக்கிய இந்த நூல் நமக்கு தக்க ஆதரமாக விளங்கியது
EDWARD THURSTON என்பவர் தென் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக வந்தார் தமது ஆய்வை CASTES AND TRIBES OF SOUTH INDIA என்ற நூல் வடிவில் அரசுக்கு சமர்பித்தார் அந்த நூலில் நம்மை பற்றிய செய்திகளும் தொகுத்து வழங்க பட்டது
அரசு முடிவு
பல்வேறு நூல்கள் வடிவில் சமர்பிக்க பட்ட சான்றுகளை சரி பார்த்த ஆங்கில அரசு இறுதியில் நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தது . எல்லா ஆவணங்களிலும் " வன்னிய குல க்ஷத்ரியர் என்று குறிப்பிட வேண்டும் என்று அரசானை வெளியிட்டது .
தெலுங்கு வன்னியர்
அன்று சீமந்திர பகுதி தமிழகத்துடன் இனைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர் , அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர் .மேலும் கோலார், பெங்களுர் , மைசூர் , கேரளா பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை திகளர் மற்றும் சம்பு குல க்ஷத்ரியர்கள் என்கின்றனர் .
அரசனை வெளியீடு
1929 ஆம் ஆண்டு ஜூன் 13 சென்னை மாகான சட்ட துறை மூலம் அரசனை எண ;271 இல் தமிழ்நாட்டில் வன்னிய குல க்ஷத்ரியர் என்றும் .தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில் அக்னி குல க்ஷத்ரியர் என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது . சுமார் 60 ஆண்டுகள் போராடி இந்த பெயர்களை பெற்றுள்ளோம் .

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

வண்ணிய நாயகர் என்பவர்கள் தெலுகு மொழியை பேசுவோர் ஆதாரம் திருவள்ளூர் கிருஷ்ணகிரி வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ளோர் தெலுகு பேசுபவர்கள் நாயகர் பட்டத்தை பயன்படுத்துகின்றனர் ரெட்டி உறவுகளோடு சம்பந்தம் செய்துள்ளனர் என்பதை தெரிவிக்கிறேன்

சிறுதொண்டர் திருநாவுக்கரசு காந்திகாசிநாதன் அடிகள் சொன்னது…

உண்மைதான்

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...