விநாயகர் வணக்கம்பண் : பாடல் எண் : 1
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. பொழிப்புரை :
ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
குறிப்புரை :
`இந்து` என்பது வடசொல்லாதலின் இன்பெறாது என்று, `இந்து விளம்பிறை` எனப்பாடம் ஓதுவாரும் உளர். `நந்தி` என்பது சிவபெருமானுக்கே பெயராதல் அறிக. திருமூலர் தமது நூலை ``ஒன்றவன்முன்`` எனத் தொடங்கினார் என்பது சேக்கிழார் திருமொழி யாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர் தாம்முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க. திருமுறைகளுள் ஒன்றிலும் முதற்கண் விநாயகர் காப்பு இல்லாமையும், சாத்திரங்களிலும் உந்தி, களிறு முதலிய சிலவற்றில் இல்லாமையும் நோக்கத்தக்கன. ``ஒன்றவன்றான் எனஎடுத்து முன்னிய அப்பொருள்மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி`` என்பதே சேக்கிழார் திருமொழியாகலின், இந் நூலின் தொடக்கப்பாடல் ``ஒன்றவன்றானே`` என்னும் பாடலே என்பது இனிது விளங்கும்.
|
அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயரும் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. பல தமிழ் புத்தகங்கள் பாடப்புத்தகங்களில் இடம் பெறாமலேயே மாணவர்களால் கற்கப்படாமல் இருக்கிறது. ஒரு உண்மை என்னவென்றால், மாணவர்களை இந்த சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே!! ஏமாற்றம் செய்கிறோம் என்பதைவிட மாணவர்களை நாம் அனுதினமும் தண்டிக்கின்றோம் என்பதே சரியாக இருக்கும். சரியான விழிப்புணர்வு இல்லாத எந்தவொரு நிகழ்வும் தோல்வியில் முடியும் என்பதே நிஜம்.
வியாழன், 2 நவம்பர், 2017
விநாயகர் வணக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்
பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...
-
திருவருட்பயனில் கூறப்பட்டுள்ள உளவியல் எண்ணக்கருக்கள் – ஓர் ஒப்பீட்டு ஆய்வு July 16, 2017 admin R. Sugirtha – Working paper – 05 ...
-
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் பண் : பாடல் எண் : 1 நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு நாலித ழானவை நாற்பத்து நாலுள பாலித ழானஅப் ...
-
கனக வைப்பு மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை மேவியுனக் குட்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக